அரசியல் நேர்மை என்பது சம்பந்தனிடம் அறவே கிடையாது!- சிறீகாந்தா அனல் பேச்சு

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கத்தை ஆதரித்து நேற்று 12.11.2019 செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் யாழ். வடமராட்சி நெல்லியடியில் உள்ள மைக்கேல் விளையாட்டரங்கில் ஆரம்பமான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் சிறீகாந்தா பங்கேற்று உரையாற்றினார்.

அங்கு உரையாற்றும் போது முக்கியமாக,
மஹிந்த, ரணில், சந்திரிக்கா, கோத்தபாய எல்லாமே ஒன்று தான். இரண்டு அணிகளிலும் உள்ள முக்கிய தலைவர்களின் கைகளிலே இரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கின்றது.

அரசியல் நேர்மை என்பது சம்பந்தனிடம் அறவே கிடையாது. புலிகளும், சிங்கங்களும் தலைமை தாங்கிய தமிழினத்துக்கு இன்று ஒரு ஆடு கிடைத்துள்ளது.