இலங்கையர்களுக்கு சுவிஸ் வீசா நிறுத்தம் செய்தி பொய்!- தூதரகம் விளக்கம்

இலங்கையில் வீசா வழங்கும் செயற்பாட்டை சுவிஸ் தூதரகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என வெளியான செய்தியில் உண்மை இல்லை என தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த கார்த்திகை 25ஆம் திகதி சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியால் வீசா வழங்கும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த விடயம் தொடர்பாக ருவிற்றரில் சுவிஸ் தூதரகத்திடம் வினவியபோது, “விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளை சுவிஸ் தூதரகம் நிறுத்தவில்லை. விசா விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதுடன் குறித்த செயல்முறை இடம்பெற்று வருகின்றது. எனப் பதிவிட்டுள்ளது.