திருக்கார்த்திகை விளக்கீடு!- தீபங்களால் ஒளிர்ந்தது (Photos)

170

இந்துமக்களின் புனிதமான நாட்களில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடு நேற்று புதன்கிழமை(11) யாழ். குடாநாட்டில் சிறப்புற நடைபெற்றது.

இந்த நாளில் பிற்பகல்-06 மணி முதல் இல்லங்கள் மற்றும் சமய நிறுவனங்கள், தொழில் ஸ்தாபனங்கள், வியாபார நிலையங்கள், கல்வி நிலையங்கள் எனப் பல்வேறிடங்களிலும் மக்கள் தீபமேற்றி பக்திபூர்வமாக இறையருளை வேண்டி வழிபட்டனர்.

வீடுகள் தோறும் முன்பாக வாழைக்குற்றிகள் நாட்டி அதன்மேல் தீபமேற்றியும், வீட்டின் முன்பாக குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் இணைந்து வரிசைக் கிரமமாகப் பல்வேறு வடிவங்களில் தீபங்களேற்றியும் வழிபட்டனர்.

இதேவேளை, கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு யாழ்.குடாநாட்டிலுள்ள பல்வேறு ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.

படங்கள் : ஐங்கரன் சிவசாந்தன்-