யாழ் மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

75

ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்காக அஞ்சலி நிகழ்வு நேற்று காலை 26.12.2019 யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜா, யாழ் நாக விகாரை விகாராதிபதி, நாச்சியம்மன் கோவில் பிரதமகுரு ஜெகதீஸ்வர சர்மா, யாழ்.ஆயர் இல்ல குரு வணக்கத்துக்குரிய ஜெபரட்ணம் அடிகளார் மற்றும் ஜும்மா பள்ளி மௌலவி முகைதீஸ் ஆகியோர் பங்கு பற்றி ஆழிப்பேரலையில் சிக்கி மரணித்த உயிர்களுக்காக அஞ்சலி செய்ததுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

மிக குறுகிய நேர திட்டமிடலில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி-