யாழ்ப்பாணத்திலும் திறக்கப்பட்டது நாய்கள் காப்பகம் (Photos)

410

தியாகி அறக்கொடை நிலையத்தினால் (TCT) அமைக்கப்பட்ட நாய்களுக்கான காப்பகம் நேற்று 02.01.2020 வியாழக்கிழமை 4 மணியளவில் யாழ்ப்பாணம் அரியாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஈச்சங்காடு, அரியாலை (கொட்டு கிணறு பிள்ளையார் கோவில் முன்பாக) அமைந்துள்ள மேற்படி நிலையத்தை தியாகி அறக்கொடையின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் கால்நடைத்துறை சார்ந்தும் பல அதிகாரிகள் பங்கேற்றதுடன் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்துக்காக ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

இன்றைய காலப்பகுதியில் பெரும்பாலான வீதி விபத்துக்களுக்கு காரணங்களாக தெருநாய்களே இருந்து வருகின்றன. இதனையும் விட அதிகரித்த விசர்நாய்க்கடிக்கும் இப்படியான நாய்களின் காப்பகங்கள் சிறந்ததொரு தீர்வாக அமையும் என சமூக ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.