வல்வையின் விசித்திர பட்டப்போட்டித் திருவிழா!- வானில் பறந்த பாரம்பரிய இசைக்கு முதலிடம் (Photos)

835

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையமும் வல்வை உதயசூரியன் கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் வினோத விசித்திர பட்டப்போட்டித் திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.

வல்வை இளைஞர்களின் பல்வேறு கைவண்ணங்களிலாலான பட்டங்கள் வானில் பறந்தன.

அதில் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பறை, உடுக்கு, யாழ், தவில், மிருதங்கம், கடம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தபடி வானில் பறந்த பிரசாந்தின் பட்டமே முதலிடத்தை பெற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த பட்டப் போட்டிகளை பார்வையிட்டு இருந்தனர்.