கருவி நிறுவனத்தின் திரவ கைகழுவி அறிமுகமும் பொங்கல் விழாவும் (Videos)

187

கருவி மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையத்தின் புதிய உற்பத்தி பொருளான “திரவ கைகழுவி” (Karuvi Liquid Handwash) அறிமுகமும் பொங்கல் விழாவும் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள கருவி உற்பத்தி நிலையத்தில் 16.01.2020 வியாழக்கிழமை மதியம் திரவ கைகழுவி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த திரவ கைகழுவியானது அப்பிள், எலுமிச்சை நறுமணங்களுடன் கிடைக்கிறது.

எங்களது உற்பத்திகளுக்கு நீங்கள் தரும் ஆதரவு என்பது வெறுமனே ஒரு வர்த்தக முயற்சிக்கான ஆதரவு மாத்திரமல்ல நலிவுற்ற சமூகமாக இருக்கக் கூடிய வலு இழந்தவர்களின் வாழ்வாதாரத்திற்கு நீங்கள் தந்து கொண்டிருக்கக் கூடிய ஆதரவாகவும் இருக்கும். என திரவ கைகழுவியை வெளியிட்டு வைத்து தலைவர் தர்மசேகரம் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார்.

குறித்த வெளியீட்டு நிகழ்வில் கருவி அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக பொங்கல் விழாவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவருக்கும் சுவையான பொங்கலும், வடையும் பரிமாறப்பட்டிருந்தது.

ஏற்கனவே கருவி நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட துணிகள் துவைப்பதற்கு பயன்படும் “சைன் திரவ சலவை சவர்க்காரம்” பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்தேசியக் கம்பனிகளின் உற்பத்திகளை வாங்காமல் எமது உற்பத்திகளை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் வலு இழந்தவர்களின் வாழ்வாதாரத்தில் நீங்களும் பங்காளியாகலாம்.