குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் அலுவலரை சீருடையுடன் கூண்டில் அடைத்த பொறுப்பதிகாரி

85

இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள வதும்ப பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பொலிஸ் அலுவலகர் ஒருவரை சீருடையுடன் கைது செய்து சிறைக் கூடத்தில் அடைத்தமைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

காலியிலுள்ள வதும்ப பகுதியில் சாராயத்தை குடித்து விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரையே சீருடையுடன் பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் எல்லோர் பார்வையில் அடைத்து வைத்துள்ளார் அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.

இதை பலர் சமுக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

அத்துடன், இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் ஒளிப்படத்துடன் பரவியதால் பொலிஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.