வடக்கு – கிழக்கில் நான்கு நீதிவான்களுக்கு இடமாற்றம்

90

இலங்கையின் வடக்கு – கிழக்கில் பணியாற்றும் 4 நீதிவான்களுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி பி.சிவகுமார், திருகோணமலை நீதிவானாகவும், திருகோணமலை நீதிவான் எம்.எச்.எம். ஹம்சா, அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை நீதிவான் திருமதி நளினி சுபாகரன், யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவானும் சிறுவர் நீதிமன்ற நீதிவானுமான இடமாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மேலதிக நீதிவானும் சிறுவர் நீதிமன்ற நீதிவானுமான திருமதி காயத்திரி சைலவன், பருத்தித்துறை நீதிவானாக இடமாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், நாடுமுழுவதும் 34 மாவட்ட நீதிபதிகள், நீதிவான்களுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவால் வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.சஞ்சீவ சோமரத்ன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.