கூகுளின் போட்டியொன்றில் வென்ற யாழ்ப்பாண மாணவன்

101

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நித்தியானந்தன் மாதவன் என்கிற மாணவன் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட கூகுள் கோட் இன் – 2019 ( Google Code-In 2019) போட்டியில் ஒரு பிரிவில் முதலிடத்தை (Grand Prize Winner பட்டம்) பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவரே இவராவார்.

இதற்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இது நான்கு நாட்கள் பயணமாகும். ஏனைய போட்டியாளர்களுடன் நடப்புணர்வை வளர்க்கவும் வாய்ப்பாக இருக்கும்.

Google Code-in இன் பத்தாவது ஆண்டாக இந்தப் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. இதில் Grand Prize Winners, Runners Up, and Finalists மூன்று பிரிவான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 நாடுகளை சேர்ந்த இளையோர்கள் Grand Prize Winners போட்டியில் வென்றுள்ளனர். அதில் தான் இந்துக்கல்லூரி மாணவனும் உள்ளடங்குகிறார். அதில் இவரோடு சேர்த்து இலங்கையை சேர்ந்த மூன்று மாணவர்கள் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் 76 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 566 மாணவர்கள் பங்கேற்றனர். 29 திறந்த மூல நிறுவனங்களுடன் 20 ஆயிரத்து 840 பணிகள் (tasks) வழங்கப்பட்டன.

இதில் Apertium என்ற மென்பொருள் தொடர்பில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் நித்தியானந்தன் மாதவன் முதலிடத்தைப் பெற்று Grand Prize Winner பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட கூகுள் கோட் இன் – 2019 போட்டியில் வென்றவர்கள் முழுமையான விபரங்கள் இதோ