எங்களின் கிராமங்களுக்கு வருகிறார் ஊழல் தசை பெருத்த லஞ்ச ராஜா (Photos)

75

கடந்த சில மாதங்களாக வடக்கில் சில ஊர்களுக்கு அரங்கப் பயணங்களைத் தொடர்ந்து
ஊர் மக்களுடன் உறவாடி அவர்களுடன் இணைந்து பொங்கலிட்டு கொண்டாடி மகிழும் அதே வேளை அவர்களின் ஊரை உயர வைக்கும் உன்னத பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் அரங்க குழுவினர்.

இலஞ்ச ஊழலற்ற நேர்மையான தேசம் நோக்கிய மக்கள் அரங்கு வடக்கின் பல்வேறு ஊர்களில் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் பண்பாட்டு மலர்ச்சி கூடத்தின் தயாரிப்பில் இடம்பெற்று வரும் இவ் கொண்டாட்ட ஆற்றுகையானது நவாலி, கோகிலாக்கண்டி, கீரிமலை ஆகிய இடங்களில் களம் கண்டுள்ளது.

ஊழல் ராசாவை சுமந்த ஆற்றுகைப் பவனி சிறுப்பிட்டி, ஆவரங்கால், உரும்பிராய் ஆகிய ஊர்களை நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி பத்மநாதன்-