விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் இயங்கும் யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனத்தில்
(Jaffna College Institute of Agriculture) – Registered with Tertiary and Vocational Education Commission under P25/0026 விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா பாடநெறிக்கு (Diploma in Agricultural Production Technology (NVQ 5 or 5and 6) விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ஆங்கில மொழிமூலம் இடம்பெறவுள்ள இந்த பாடநெறிக்கு பயிற்சி நெறிக் காலம்
ஒன்றரை/ இரண்டரை வருடங்களைக் (ஆறுமாத கால தொழிற்பயிற்சி உள்ளடங்கலாக) கொண்டது.

அனுமதி பெறுவதற்கான தகைமைகள் :
க.பொ.த. (சா.த.) பரீட்சையில்; சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
ஆங்கிலமொழி அறிவு (க.பொ.த. (சா.த.)/ சமமான ஏற்றுக் கொள்ளக்கூடிய தகமை )
அத்துடன் க. பொ. த. (உ.த.) பரீட்சையில் உயிரியல் அல்லது தொழில்நுட்பவியல் துறை அல்லது விவசாயப் பாடத்தினை கற்று அப்பாடத்தில் சித்தியடைந்திருத்தல்.

அல்லது

விவசாயத் துறையுடன் தொடர்புடைய தேசிய தொழில்சார் தகைமை (NVQ Level-4) பாடநெறி ஒன்றினை வெற்றிகரமாக பயின்று சான்றிதழைப் பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகள்.

வயது எல்லை – விண்ணப்பதாரிகள் 18 வயது தொடக்கம் 35 வயதுவரை

தங்களின் சுயவிபரக் கோவையுடன் அனைத்து விண்ணப்பங்களையும் பதிவுத் தபாலில் அல்லது நேரடியாகவோ 2020.03.24 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு கீழ் வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

விண்ணப்பப்படிவத்தை அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பம் எனத் தெளிவாக எழுதப்படல் வேண்டும்.

நேர்முகத் தேர்விற்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளிற்கு அவர்களின் சுயவிபரக்கோவையில் குறிப்பிட்டப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு/ மின்னஞ்சல் முகவரிக்கு அது தொடர்பாக தெரியப்படுத்தப்படும்.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கு/ மேலதிக தகவல்களிற்கு

Principal
Jaffna College Institute of Agriculture,
Maruthanarmadam, Chunnakam,

Email – jcinstituteofagriculture@gmail.com
Tel: 021 224 1420