அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் மூட உத்தரவு

இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் நாளை (மார்ச் 14) தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அச்சநிலை காணப்படுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும் நாளை தொடக்கம் வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் மூடத் தீர்மானித்தாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதே வேளை, நேற்று வெள்ளிக்கிழமை மதியமளவில் கூடிய யாழ்ப்பாண பல்கலைக்கழக பீடாதிபதிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ். பல்கலைக்கழகத்தின் சகல கல்வி நடவடிக்கைகளையும் இரண்டு வாரத்துக்கு நிறுத்துவதற்கு முடிவு செய்திருக்கிறனர். இதன் படி சகல மாணவர்களும் விடுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படவுள்ளனர்.