யாழில் இடம்பெற்ற பெண் செயற்பாட்டாளர்களின் சங்கமம் (Photos)

அவள் தைரியமானவள் – நாட்டுக்கு பலமானவள் என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மன்னார் மாவட்டத்தின் மாதர் முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில்
சமூக மட்டத்தில் இயங்கும் பெண்களுக்கான கருத்தரங்கு யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கடந்த 11.03.2020 புதன்கிழமை இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட மாதர் சங்க இணைப்பாளர் திருமதி மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை முழுவதுமிருந்து வந்திருந்த பெண் செயற்பாட்டாளர்களையும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் படங்களில் காணலாம்.

யாழ்.தர்மினி-