நல்லவர்கள் சிறு திரள்களாக இருக்கிறார்கள்: லூசர்கள் எல்லா இடங்களிலும் மேலே வந்துவிட்டார்கள் (Video)

186

கேள்வி: காலம் காலமாக தமிழ் கட்சிகள் சாதிய அடிப்படையில் தான் வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றனவே? இதற்கு தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து தீர்வு காணவே முடியாதா?

பதில்: மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் சமூகத்தை பிளக்கிற வேலை நடக்கிறது. அந்த மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தேர்தல்களில் வழங்கப்பட வேண்டும். வலிந்து இல்லாத ஒரு தலைவர் அங்கே உருவாக்கப்பட முடியாது.

இந்தக் கட்சிகள் அந்த மக்கள் மத்தியில் வேலை செய்து அங்கே உள்ளூர் தலைவர்களை உருவாக்கி அதற்குள்ளால் உரிய பிரதிநிதித்துவத்தை கொடுப்பது தான் சரி. ஒன்றில் தகுதியற்றவர்களை தலைவர்களாக கொண்டு வருகின்றார்கள். அல்லது மேலிருந்து கீழ் நோக்கி ஒரு தலைவரை அவர்கள் மீது திணிக்கிறார்கள். இரண்டுமே பிழை.

நீங்கள் அந்த மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்து அந்த மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அந்த மக்களின் நம்பிக்கையை பெறுவீர்களாக இருந்தால் அங்கே உள்ளூர் தலைமைத்துவத்தை வளர்த்தெடுப்பீர்கள்.