கொரோனா முதல் மரணம் இலங்கையில் பதிவானது

266

இன்றையதினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – அங்கோடை தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோரோனா நோயாளி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகச் செயற்பட்ட மாரவிலயைச் சேர்ந்த 60 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கோரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழக்கும் முதலாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோரோனா தொற்றுக்குள்ளாகிய தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

நீரிழிவு நோயாளியான அவர், ஒரு வருடத்துக்கு முன் சீறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை செய்திருந்தார் என்றும், ஆரம்பத்திலிருந்தே அவரது நிலை கடுமையான நிலையிலிருந்தது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.