ஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு

இன்று அதிகாலையில் இருந்து ஆலயங்கள் தொடர்பில் வதந்தி பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சிலைகள் சரிந்ததால் ஆண்கள் மஞ்சள் நீராடவேண்டுமெனவும் , இவை நாட்டுக்கு நல்லதல்லவெனவும் திட்டமிட்டு வதந்திகளை யாரோ பரப்பியிருப்பதாக தெரிகிறது.

குறித்த வதந்தி தொடர்பில் இன்று அதிகாலையில் இருந்து பல்வேறு தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படியான போலி செய்திகளை – வதந்திகளை பரப்புவோர் கைது செய்யப்படுவார்களென பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனாவை பயன்படுத்தி மக்களை குழப்பமடையச் செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.