கொரோனாவுக்கு பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களும் பலியாகி வருகின்றனர்.

பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நீராவியடி பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர், தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.