சுமந்திரன் அளித்த பேட்டியில் புதிதாக ஒன்றுமில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Video)

293

கட்சியினுடைய கருத்துக்கள் என்பது கட்சியின் தலைவர் மற்றும் ஊடகப் பேச்சாளர் முன்வைக்கும் கருத்துக்கள் தான். இவர்கள் கடந்த 11 வருடங்களாக இப்படியான விடயங்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார்கள்.

கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயா போர் முடிவுக்கு வந்த போது நாடாளுமன்றில் வைத்து மஹிந்தவுக்கும் அரசுக்கும் போராட்டத்தை அழித்து முடிவுக்கு கொண்டு வந்தமைக்கு பாராட்டு தெரிவித்தார்.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் பல உண்மைகளை அவர் தமிழ் தேசியக் கூடடமைப்பு சார்பில் வெளிப்படுத்தியிருக்கின்றார் என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஆயுதப்போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சிறிலங்காவின் சிங்கக் கொடியையும் தேசிய கீதத்தையும் ஏற்றுக்கொள்வதாக சுமந்திரன் கூறியிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் கொள்கையை கைவிட்டு புதிய பாதையில் செல்வதாக, நாங்கள் 11 வருடங்களாக வலியுறுத்தி வருகின்றோம்.

இந்த ஒரு சம்பவத்தை மட்டும் நாங்கள் பார்க்காமல் சம்பந்தனும் சுமந்திரனும் கடந்த 11 வருடங்களாக சுட்டிக்காட்டி வரும் கருத்துக்களைப் பார்த்தால், சுமந்திரன் அளித்த பேட்டியில் புதிதாக ஒன்றுமில்லை என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 வருடங்களாக தமிழ்த் தேசிய அரசியலை தங்களது பிடிக்குள் எடுத்து தமிழர் அரசியலில் இருந்து தமிழ்த் தேசிய நீக்கத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த உண்மையை தமிழ்மக்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.