நள்ளிரவில் அதிகரித்தது பெற்றோல் விலை

45

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் ஒக்டெய்ன் 92 பெற்றோலின் விலையை 5 ரூபாவால் அதிரித்துள்ளது.

இந்நிலையில் 137 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டெய்ன் 92 பெற்றோல், விலை அதிகரிப்பின் படி142 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, ஏனைய எரிபொருள்களின் விலையில் எவ்வித மாற்றமில்லையெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.