991 ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்

89

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவி்த்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 991 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ளது.