யாழ். மாநகரசபை தீயணைப்பு வீரருக்கு இறுதி அஞ்சலி: பலரும் பங்கேற்பு (Photos)

கடந்த 16 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு வாகன விபத்து நீர்வேலியில் இடம்பெற்றதில் உயிரிழந்த தீயணைப்புப் படை வீரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலிக் கூட்ட நிகழ்வு இன்று மாநகர தீயணைப்புப் படைப்பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் முதன்மை உரையினை யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புரைகளும் இடம்பெற்றன.

அஞ்சலி கூட்டத்தில் யாழ் மாநகர சபையின் உறுப்பினர்கள் , விடுமுறையில் உள்ள முதல்வர் இமானுவேல் ஆனல்ட், மாநகர சபையின் நிர்வாக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தீயணைப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலியினை செலுத்தினர்.