என்னுடைய அனுபவம் சசிகலாவுக்கு பாடமாக இருக்க வேண்டும்!- அனந்தி அதிரடி (Video)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பெண்களுக்கான அங்கீகாரம் இல்லை. பெண்களை அடிமைப்போக்கில் பார்க்கின்ற ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் தான் அங்கு இருக்கின்றார்கள். என ஈழ மக்கள் சுயாட்சிக் கழக செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக மன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் அரசியலுக்கு வந்த போது அவர்களிடம் இருந்து அனுபவ பாடங்களை கற்றுக் கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. என்னுடைய அனுபவம் ரவிராஜ் சசிகலாவுக்கு பாடமாக இருக்க வேண்டும். கருவேப்பிலை போன்று பெண்களை பயன்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மாமனிதர் விருது கொடுத்த ரவிராஜின் சிலையில் மாமனிதர் இலட்சினை பொறிக்கப்படாமல் இப்பொழுது வாக்கு கேட்க்கின்ற போது தமிழரசுக் கட்சி மாமனிதர் ரவிராஜின் மனைவிக்கு வாக்குப் போடுங்கள் என்று கேட்கின்றது.