கொரோனா நோய் அறிகுறிகளின் பட்டியலில் மேலும் மூன்று அறிகுறிகள் சேர்ப்பு

உலகெங்கும் வேகமாக பரவிவரும் கொரோனா அறிகுறிகளின் பட்டியலில் மேலும் 3 அறிகுறிகளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சேர்த்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுப் போக்கு ஆகியனவும் அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே காய்ச்சல், இருமல்,சுவாசத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி, மணம்-சுவை அறியும் திறன் இழத்தல், தொண்டை வலி ஆகியன கொரோனா அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் அறிகுறிகள் தெரியும் என கூறப்பட்டுள்ளது.

அவற்றில் ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ப அறிகுறிகளும், நோயின் தாக்கமும் வேறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.