கால்நடை தீவன உற்பத்திக்கு அரிசி, நெல்லை பயன்படுத்த தடை

கால்நடை தீவன உற்பத்திக்கு அரிசி அல்லது நெல்லைப் பயன்படுத்துவது அல்லது விலங்கு தீவன உற்பத்தியில் அவற்றை உள்ளீடுகளாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அசாதாரண அரசிதழ் அறிவிப்பு பின்வருமாறு;
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் பிரிவு 10(1)(ஆ)(ii) இன் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் கீழ் தொழிற்படுகின்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது விலங்கு உணவு தயாரிப்புக்கு நேரடியாகவோ அல்லது உள்ளீடாகவோ உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஏதேனும் அரிசி அல்லது நெல்லினை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் அல்லது வழங்குனர்கள் எவரும் விற்பனை செய்யவோ விற்பனைக்காகக் காட்சிப்படுத்தவோ அல்லது விற்பனைக்குக் கோரவோ, களஞ்சியப்படுத்தவோ, கொண்டு செல்லவோ, விநியோகிக்கவோ, வாங்கவோ அல்லது கொள்வனவு செய்யவோ முடியாதென பணிப்புரை விடுகிக்கின்றது.