தமிழ்த் தேசியத்தை நீக்கம் செய்யும் கட்சிகளை நிராகரியுங்கள்: தமிழ்த்தேசிய மகளீர் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்த் தேசியத்தை நீக்கம் செய்யும் கட்சிகளை கட்டாயம் நிராகரியுங்கள். அவர்களால் மக்களுக்கு ஒரு போதும் நன்மை கிடைக்கப் போவதில்லை. என தமிழ்த்தேசிய மகளிர் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் 02.,08,2020 யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை இடம்பெற்ற இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2020 தொடர்பிலான ”பெண்களுக்காக எழுவோம் பெண்களுக்காக இணைவோம்” என்ற தொனிப் பொருளில் பெண்களின் சமூக பொருளாதார அரசியல் பிரதி நிதித்துவம் குறித்து பெண் சிவில் சமூகப் பிரதி நிதிகளின் கருத்துக் பகிர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் மக்கள் ஏமாந்தது போதும். இப்போதுள்ள சூழலை வைத்து வாக்களிக்காமல் விட வேண்டாம் . கட்டாயம் அனைத்துப் பெண்களும் சரியானவர்களை தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும் . தமிழ்த்தேசிய அரசியலை நீக்கம் செய்யும் எந்தக் கட்சிகளுக்கும் வாக்களிக்கக் கூடாது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முதியவர்களுக்கு மற்றும் சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது. தமிழ்த் தேசியக் கொள்கையில் மக்களுக்காக எந்தக் கட்சி செயற்படுகின்றதோ அந்தக் கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு புதியவர்களுக்கு பெண்களுக்கு வாக்களியுங்கள். எனத்தெரிவித்தார்.

இக்கருத்துப் பகிர்வில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் கற்றவையும் கற்றுக் கொள்ள வேண்டியவையும் தொடர்பில் திருமதி கிருத்திகா தருமராஜாவும் , தமிழ் மக்களுக்கான சமூக அரசியல் நகர்வுகளும் பெண்களின் பங்களிப்பும் குறித்து திருமதி விமலேஸ்வரி ஸ்ரீஸ்கந்தராஜாவும் , காணாமலாக்கப் பட்டோரின் பிரச்சனைகளின் தீர்வுக்கான பொறிமுறைகளில் பெண்களின் பங்களிப்பு குறித்து, வலிந்து காணாமலாக்கப் பட்ட சங்கத்தின் செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்தநடராஜாவும் , பெண்களின் அரசியல் பிரதி நிதித்துவத்தில் உழைக்கும் பெண்களின் பங்கு குறித்து உழைக்கும் மகளீர் சங்கத்தின் தலைவி திருமதி மிதிலை செல்வி பத்மநாதனும் கருத்துரை வழங்கினார்கள்.

 

வடமாகாணத்தை சேர்ந்த மகளீர் அபிவிருத்தி நிலையம் , மகளீர் ஐக்கிய நாணய சங்கம், மாதர் கிராம முன்னேற்ற சங்கம், உழைக்கும் மகளீர் அமைப்புக்கள், மகளீர் கமக்கார அமைப்பு, வலிந்து காணாமலாக்கப் பட்ட உறவுகளின் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்த பல பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமையுடன் ஆளுமையான கெட்டித்தனமுடையவரும், பெண்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் தமிழ் தேசிய கொள்கை உடைய வேட்பாளரையும் அதில் விருப்பு வாக்கில் பெண்ணையும் தெரிவு செய்ய வேண்டும் என்றும் கட்டயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி பத்மநாதன்