நோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா? எச்சரிக்கிறார் இளம் இயற்கை விவசாயி கிரிசன்


மருதனார்மடம் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இயற்கை விவசாய வார தொடக்கத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியை சேர்ந்த இளம் இயற்கை விவசாயி மகேஸ்வரநாதன் கிரிசன் ஆற்றிய உரை வருமாறு,

இன்று வைத்தியத் துறைக்கான கேள்வி அதிகரித்துள்ளது என்று சொன்னால் நாங்கள் அதனை நினைத்து பெருமைப்பட முடியாது. இன்று எங்கள் மத்தியில் ஆரோக்கியமில்லாத சமூகம் அதிகரித்துள்ளது என்பதனையே அது காட்டுகிறது.

விவசாயத்துறையில் அதிகளவு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் நிலம் நஞ்சாகி பாழாவதோடு மனித உடலும் பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகிறது.

இயற்கை விவசாயத்தை நோக்கி மக்கள் திரும்ப வேண்டிய அவசியத்தையும் விளக்குகிறார்.