இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 3,195ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனால் இலங்கையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,195ஆக அதிகரித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 19 பேர், குவைட் நாட்டிலிருந்து வருகைத் தந்த 2 பேர், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,983 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் 2 கோடியே 89 இலட்சத்து 17 ஆயிரத்து 028 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 9இலட்சத்து 25 ஆயிரத்து 198 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.