நல்லூரில் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று காலை நவராத்திரி விழாவின் இறுதி நாளான மானம்பூ திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்ததை தொடர்ந்து வாழைவெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

கொரோனா காலப்பகுதி ஆகையால் குறைந்தளவு பக்தர்களே வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

படங்கள் : ஐங்கரன் சிவசாந்தன்-