யாழ்ப்பாணத்தில் 24 மணி நேர பால் விற்பனை சேவை: அசத்தும் பட்டதாரி இளைஞன் (Video)

“யாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்” எனும் முயற்சியாளர் குறித்த சிறு கட்டுரை நிமிர்வு இதழின் வைகாசி – ஆனி இதழில் முதலில் வெளியாகி பின் நிமிர்வு இணையத்திலும் வெளியாகி பலரிடமும் நன்மதிப்பை பெற்றிருந்தது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த சிவலிங்கம் யசிகரன் என்கிற இளைஞர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கணனி விஞ்ஞானம் படித்து பட்டதாரியாக வெளியேறி தற்போது கோண்டாவில் உப்புமடம் சந்திக்கருகில் 24 மணிநேர பால் விற்பனை சேவையை நடாத்தி வருகிறார்.

எம் சமூகத்துக்கு முன்மாதிரியாக விளங்கும் இந்த இளைஞர் தான் பால் விற்பனை சேவையை தொடங்கியதன் பின்னணி மற்றும் பால் சார்ந்த உற்பத்திப் பொருள்கள், உள்ளூர் உற்பத்திகள் தொடர்பிலும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். கேளுங்கள்.