மாவீரர் நாள் அனுட்டிப்பதற்கு தடைகோரி யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது சமர்ப்பணம் செய்த யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி “புட்டும், சோறும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு தமிழர்கள், யுத்தத்தை முடித்ததன் மூலம் பீஸா சாப்பிடும் நிலைமையை உருவாக்கினோம்“ என தெரிவித்திருந்தார்.
இதற்கு நீதிமன்றத்திலேயே பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்தார். நீதிபதியும் அதிருப்தி தெரிவித்து, பொலிஸ் பொறுப்பதிகாரியை கட்டுப்படுத்தினார்.
இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்கள் எங்கும் பிரசாத் பெர்னாண்டோவை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
தங்களது உணவு உரிமையில் எவரும் கைவைக்க விடமாட்டோம் எனவும் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புட்டு ஏராளமான வகைகளில் இருக்கும் போது விதவிதமான புட்டு பலவகையான கறிகளுடன் தனிய உணவகமே தொடங்கலாம் எனவும் பலர் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவிற்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக ஊடகங்களில் புட்டு குறித்து வெளியான பதிவுகளும் கீழே,
1. முக்கனிகளும் சங்கமிக்கும் புட்டு
2. இந்தாங்கோ புட்டுப் பாட்டு
3. அடப் போங்கப்பா புட்டுத்தான் எங்க வீட்டுல எல்லாம் தேசிய உணவே…
மரவள்ளி புட்டும் நாட்டுக் கோழி குழம்பும்…
4. சுவிஸிலும் தமிழர்களின் தேசிய உணவு புட்டு தானாம்….
5. அரிசி மா புட்டு கணவாய்ப்பிரட்டல் முட்டைப்பொறியல் கதலி வாழைப்பழத்துடன் காலைச் சாப்பாடு
6. புட்டு எங்கள் சொத்து
7. வேற லெவல் Combo
8. புட்டும் நண்டுக் கறியும்
9. புட்டை சாப்பிட்டா தான் வயிறே நிறையும் எங்களுக்கு….
10. சிவபெருமானுக்கே சம்பளமாக புட்டுக் கொடுத்த பரம்பரை
11. தட் காக்கி சட்டை
12. புட்டு யாழ்ப்பாணத்தானின் வாழ்வியலோடு கலந்த ஒன்று
13. தெரிஞ்சா சொல்லு உடன கல்யாணம்
14. கணவாய் காச்சின சட்டியை வழிப்பதே சொர்க்கம்
15. புட்டு vs Pizza
16. விஜயன் இலங்கைக்கு Pizza 🍕 கொண்டு வரும் போது குவேனி புட்டு செய்துகொண்டிருந்தாள்… புட்டுப் புட்டு வைப்போம்.
17. யாழ்ப்பாணத்து சுவைமிகு ஒடியல் மா புட்டு
18. சுவையான யாழ்ப்பாணத்து அரிசிமா புட்டு
19. புட்டு கொத்து
20. பிட்டுக்கு இவ்வளவு வரலாறா?, பிஸா எல்லாம் வேஸ்ட்டு