தீவிர புயலாக வலுவடைந்தது நிவர் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இலங்கையின் வடக்கு பிரதேசங்களில் பல இடங்களிலும் பலத்த காற்று வீசி வருகின்றது. மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரண்ட் கம்பிகள் அறுந்து வீழ்ந்தால் உடன் அறிவிக்கக் கோரிக்கை

வட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும்.

இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும்.

எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு
ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

Jaffna 0212222609
Thirunelveli Kondavil 0212222498
Chunnakam 0212240301
Chavakachcheri 0212270040
Point Pedro 0212263257
Vaddukoddai 0212250855
Velanai 0212211525

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 1 2 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். அப்போது 155 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு நிலவரம்

‛நிவர்’ புயல், மாமல்லபுரத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே, நாளை (நவ., 25) கரையை கடக்கிறது. இதனால், தமிழகம் முழுதும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் மழையால் பாதிக்கக் கூடிய பகுதிகளில், முன்கூட்டியே, ‘கரன்ட் கட்’ செய்யவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மக்களை தங்களை தற்காத்து கொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், முடிந்தளவு வீட்டினுள் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் நேற்று முதலே பரவலாக மழை பெய்ய தொடங்கிவிட்டது. புயல் நெருங்கி வர வர மழையின் தீவிரமும் சற்றே அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. புயல் தொடர்பான விஷயங்கள் சமூகவலைதளமான டுவிட்டரில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன.

பலரும் சென்னையில் இந்த இடங்களில் மழை பெய்கிறது, அந்த இடங்களில் மழை பெய்கிறது. இங்கு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கவனமாக இருங்கள் என எச்சரித்து போட்டோ, வீடியோ உடன் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் புயல் காலத்தில் ஏதேனும் அவசர அழைப்பு எண் தேவைப்பட்டால் இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள் என குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் புயல் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும், பாதுகாப்பான வழிமுறைகள் என்ன என்பதை விழிப்புணர்வு வீடியோ, போட்டோ மற்றும் தகவல்கள் மூலம் பரிமாறி வருகின்றனர். இதனால் #NivarCyclone, #CycloneAlert,உள்ளிட்ட ஹாஷ்டாக்குகள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன.