தமிழ்மக்களை பிரித்தாளும் சக்திகள்!- எச்சரிக்கிறார் பேராசிரியர் சிதம்பரநாதன் (Video)

2000 களின் நடுப்பகுதியில் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக்கான எழுச்சி வந்து ஒரு தவிர்க்கப்பட முடியாததாக வந்து விட்டது. பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று சொன்னால் இரண்டு இனங்களும் சமம், இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் வைத்துத் தான் இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய நிலைமை ஒன்று அன்று இருந்தது. நாங்கள் அந்தக் காலத்தில் மக்கள் மத்தியில் தீவிரமாக வேலை செய்திருந்தோம்.

அந்த நேரம் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த சொல்ஹெய்ம் எங்களைச் சந்தித்திருந்தார். அப்போது நாங்கள் அவருக்கு சொன்னது என்னவென்றால், இலங்கைத்தீவில் தமிழ் சிங்களம் என்ற இரண்டு தேசிய இனங்களும் சமத்துவமானவை. எண்ணிக்கையில் பெரிது சின்னனாக இருக்கலாம். ஆனால், சமத்துவமானவை. இரண்டு தேசிய இனங்களும் சமமானவை என்ற அடிப்படையில் வைத்து அந்த இரண்டு இனங்களின் தலைமைகளும் சமமானவை என்ற அடிப்படையில் வைத்து இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். என நான் கூறினேன்.

அப்போது சொல்ஹெய்ம் எனக்கு கூறியது என்னவென்றால் நீங்கள் இதனை பெரிய நாடுகளுக்கு சொல்ல வேண்டும். பெரிய நாடுகள் இதனை ஒரு சிறுபான்மை பிரச்சினை என்று தான் பார்க்கின்றன. தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனம். அந்த இனத்துக்கு கலாச்சார உரிமைகள் இருக்கின்றன. அதனை கொடுத்தால் போதும், என்று தான் பார்க்கின்றார்கள். தமிழ்மக்களும் ஒரு தேசிய இனம் இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன என்று அவர்கள் பார்ப்பதில்லை. நீங்கள் அந்த லொபி வேலையை பெரிய நாடுகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால்,அதற்கு பிறகு எல்லா நிலைமைகளும் மாறி விட்டன. தனிய சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல. உலக ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து இந்த இனவழிப்பை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கிறார்கள்.

இயக்கத்துக்கு கட்சிகள் மேலே நம்பிக்கை இருக்கவில்லை. இதனால் மக்கள் மத்தியில் இருக்கும் சிவில் அமைப்புக்களையும் இணைந்து தான் கூட்டமைப்பை பூரணப்படுத்துகிறார்கள். ஆனால், பின்பு நடந்ததோ வேறு…. இன்று மக்களை பிரித்து, கூறுபோட்டு, அரசியலில் வெறுப்படைய வைக்கும் செயற்பாடுகளே நடைபெறுகின்றன. இனி மக்களை ஒற்றுமையாக்கும் வேலையை அடியிலிருந்து தொடங்க வேண்டும்.

முழுமையாக கேட்க காணொளியை பாருங்கள்….