விபத்தில் சிக்கிய வல்வெட்டித்துறையை சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு

மானிப்பாய் – உரும்பிராய் வீதியில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

வல்வெட்டித்துறை வேம்படியை சேர்ந்த மோகனதாஸ் பிறேமாவதி (68 வயது) தாயாரும் அவரது மகனான மோகனதாஸ் திலீபன் (32 வயது) ஆகியோரே உயிரிழந்தனர்.

கடந்த ஞாயிறு அன்று மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழிபட பயணித்தபோது கார் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. குறித்த விபத்தில் காரில் பயணித்த மேலும் ஐவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.