லொக்டவுனில் வீட்டு மோதல்கள் உச்சம்: 150 பேர் வைத்தியசாலையில்!- அதிகளவானோர் ஆண்கள்

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில், வீடுகளுக்குள் இடம்பெறும் குடும்பத் தகராறு காரணமாக, வன்முறைகளில் காயமடைந்து 150 க்கும் மேற்பட்டவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதில், அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 112 பேர் ஆண்களாவர்கள் என்றும், 42 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வீட்டு வன்முறைகளை அடுத்து, நபரொருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்றும், அவருடைய சடலம், ​கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதெனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.