டொமினிக் ஜீவா தொகுப்பு நூல் வெளியீடும் நினைவுப் பகிர்வும் நாளை

மறைந்த ஈழத்து எழுத்தாளர் டொமினிக் ஜீவா தொகுப்பு நூல் வெளியீடும் நினைவுப் பகிர்வும் நாளை ஞாயிறு மாலை 7 மணிக்கு Zoom கலந்துரையாடலாக இடம்பெறவுள்ளது.

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்) ஒழுங்கு செய்யும் இந்த நிகழ்வுக்கு தேவதாசன் தலைமை தாங்குகிறார்.

நினைவு உரைகளை டொமினிக் ஜீவாவின் மகன் திலீபன் டொமினிக், மூத்த எழுத்தாளர் தெளிவத்தை யோசப், கவிஞர் மேமன் கவி, இலங்கை எழுத்தாளர் சங்க செயலாளர் கமல் பெரேரா ஆகியோர் வழங்க, தொகுப்பு நூல் குறித்தான உரைகளை விஜி, மல்லியப்புசந்தி திலகர், சிராஜ் மஜ்கர், ரங்கன் ஆகியோர் வழங்க உள்ளனர்.

உரைகளை தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறும். ஆர்வமுள்ள இலக்கிய ஆர்வலர்கள்
Zoom செயலி ஐடி: 830 2340 8850
பாஸ்வேர்ட் : 842312 ஊடாக இணைந்து கொள்ள முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

28 ஆம் திகதி தைமாதம் 2021 இல் காலமான அன்னாருக்கு கடந்த ஆனி 28 அன்று 94 ஆவது அகவையாகும்.