யாழ்.பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்ட நால்வர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்றுச் சனிக்கிழமை(28.08.2021) காலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்தது.

இதற்கமைய, யாழ்.பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவருமான திருமதி. மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியல் துறைப் பேராசிரியராகவும், யாழ்.பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும், தாவரவியற்துறைத் தலைவருமான இ. கபிலன் தாவரவியற்துறைப் பேராசிரியராகவும், யாழ்.பல்கலைக்கழக பெளதிகவியல் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி க.விக்னரூபன் பெளதிகவியல் பேராசிரியராகவும், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் பல்கலைக்கழகத் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதியும், விவசாய பீடத்தின் முன்னாள் தலைவருமான கலாநிதி. சிவமதி சிவச்சந்திரன் பயிரியல் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுத்துவதற்கே மேற்படி பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

(செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி)