இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை(31) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி மேற்படி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 90 சதமாகவும்,விற்பனைப் பெறுமதி 204 ரூபா 89 சதமாகவும்,ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 276 ரூபா 81 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 288 ரூபா 36 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 58 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 244 ரூபா 43 சதமாகவும், ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 82 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 1 ரூபா 90 சதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.