புத்தாக்க அரங்க இயக்கத்தின் இணையவழி அரங்க கதையாடல் நாளை

புத்தாக்க அரங்க இயக்கம் வாராந்தம் நடாத்தும் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் கதையாடல்-9 நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(05.09.2021) இரவு-07 மணியளவில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் நடைபெறும்.

குறித்த நிகழ்வில் வைரவா கலைக் கழகத்தின் தலைவரும், மட்டக்களப்பு முருகன்தீவு சிவசக்தி வித்தியாலய ஆசிரியருமான அழகுதனு “மட்டக்களப்பு அடிப்புற அரங்கச் செயற்பாட்டு அமைப்பின் செயற்பாடுகளும் இராம நாடகக் கூத்தின் ஆற்றுகை அனுபவப் பகிர்வும்” எனும் தலைப்பில் கதையாடவுள்ளார்.

புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் நிறைவுரையை வழங்கவுள்ளார்.

இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 73534935699, கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி)