இன்றும் 2960 பேருக்கு கொரோனாத் தொற்று: மேலும் 184 பேர் உயிரிழப்பு!

நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(07.09.2021)கொரோனாத் தொற்று உறுதியான மேலும் 2960 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி,நாட்டில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 471,859 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1769 பேர் இன்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 388,278 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை(06.08.2021) கொரோனாத் தொற்றுக் காரணமாக மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் பதிவான கொரோனாத் தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,504 ஆக அதிகரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.