யாழ்.மாவட்டக் காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்

யாழ்.மாவட்டக் காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை(06.08.2021) முதல் மட்டுப்படுத்தப்பட்டவளவில் ஆரம்பமாகியுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த சேவையின் அவசர, அவசியத் தன்மை கருதி தினமும் காலை-09 மணி முதல் மாலை-04 மணி வரை 0212225681 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முற்பதிவு செய்து சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

(எஸ்.ரவி)