சாவகச்சேரியில் சோகம்: கொரோனாவால் வயோதிபத் தம்பதியர் அடுத்தடுத்து மரணம்!

யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியரான
கணவனும்,மனைவியும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தென்மராட்சி சாவகச்சேரி நுணாவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 97 வயதான வாரித்தம்பி காசிநாதர், அவரது 89 வயதான மனைவி மகேஸ்வரி காசிநாதர் ஆகியோருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கொரோனாத் தொற்று விடுதியில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 89 வயதான மனைவி கடந்தவாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். அவரது சடலத்தை மின்தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தநிலையில் கணவரும் நேற்றுத் திங்கட்கிழமை(06.09.2021)சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி)