ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டுப் பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டுப் பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் பரீட்சைகளுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனாத் தொற்று நிலைமையைக் கருத்திற் கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டுப் பரீட்சையை எதிர்வரும்- 21 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.