யாழில் ஒரேநாளில் பத்துப் பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

யாழ்.மாவட்டத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(07.09.2021) மேலும் பத்துப் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி,யாழ்ப்பாணத்தில் 02 பேர், நல்லூரில் 02 பேர், உடுவிலில் ஒருவர், தெல்லிப்பழையில் ஒருவர்,சண்டிலிப்பாயில் ஒருவர்,கோப்பாயில் ஒருவர் என எட்டுப் பேர் கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று உயிரிழந்த பெண் ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தென்மராட்சியின் மட்டுவில் பகுதியில் உயிரிழந்த 65 வயதுப் பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

(செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி)