சீனியை அதிக விலைக்கு விற்ற கூட்டுறவு சங்கத்திற்கு வழக்கு

அதிக விலையில் சீனியை விற்பனை செய்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நல்லூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினரால் ஒரு கிலோ சீனி 200/= விற்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர்களால் விசாரிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.