சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியீடு

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வியாழக்கிழமை(23.09.2021)சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

குறித்த பெறுபேறுகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

இதேவேளை,கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் இவ்வருடம் மார்ச்மாதம் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.