பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் (Photo)

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை(27.09.2021) காலை-07 மணி முதல் நண்பகல்-12 மணி வரை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துக் குறித்த பணிப் புறக்கணிப்புப் போராட்டடம் முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு இடையூறு எதுவும் இன்றிக் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை,நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர் இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டனர். 44 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த தொழிற்சங்கப் புறக்கணிப்பில் ஈடுபட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:-எஸ். ரவி)