யாழில் அநாதரவாக கைவிடப்பட்ட வயோதிபத் தாய்: உரியவர்கள் முன்வருவார்களா?

யாழில் வீதியில் அநாதரவாக வயோதிபத் தாய் ஒருவர் கைவிடப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

தற்போது கொரோனாத் தொற்றுக் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த வயோதிபத் தாய் தள்ளாத வயதிலும் தன்னந்தனியாகத் தற்போது யாழின் பல பகுதிகளிலும் வீதிகளில்
அலைந்து திரிந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

எனவே,குறித்த வயோதிபத் தாயை மீட்டுப் பராமரிக்க மேற்படி வயோதிபத் தாயின் குடும்பத்தவர்கள் அல்லது உறவுகள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

(செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி)