மகாத்மாகாந்தியடிகளின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இணையவழியில் இன்று கருத்தரங்கு

மகாத்மா காந்தியடிகளின் 153 ஆவது ஜெயந்தி தினத்தையும், சர்வதேச அகிம்சை தினத்தையும் முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியற் துறையும், அகில இலங்கை காந்தி சேவை சங்கமும் இணைந்து நடாத்தும் சூம் செயலி  ஊடான நிகழ்நிலைக் கருத்தரங்கு இன்று சனிக்கிழமை (02.10.2021)இரவு-07 மணியளவில் யாழ்.பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்.சிவகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.   

யாழ்.இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா, யாழ்ப்பாணப்  பல்கலைக்கழக கலைப்  பீடத்தின் பீடாதிபதி கலாநிதி க.சுதாகர் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரபல சமய சமூகப் பெரியார் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு திருமுருகன் “மகாத்மா காந்தியடிகளின் யாழ்ப்பாண விஜயமும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும்”எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றவுள்ளார். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவி எச்.ஏ.இஸ்ரத் காந்திய சித்தாந்தத்தின் தொடர்பு எனும் தலைப்பிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியான ஆர். பவித்ரா மகாத்மா காந்திஜியின் சுற்றுச்சூழல் தொடர்பான கண்ணோட்டம் எனும் தலைப்பிலும்  சிறு உரைகள் ஆற்றவுள்ளனர்.

நிகழ்வு இலக்கம்-2043818884, கடவுக் குறியீடு- peace@2021 ஆகியவற்றைப் பதிவு செய்து நீங்களும் மேற்படி நிகழ்நிலை கருத்தரங்கில் இணைந்து பயனடைய முடியும் என மேற்படி நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:-செ. ரவிசாந்)