புத்தாக்க அரங்க இயக்கத்தின் இணையவழி அரங்க கதையாடல் இன்று

புத்தாக்க அரங்க இயக்கம் வாராந்தம் நடத்தும் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் கதையாடல்- 24 நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(03.10.2021) இரவு-07 மணியளவில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இந் நிகழ்வில் வலிகாமம் கல்வி வலயஆரம்ப பிள்ளைப்பருவ, அழகியல் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் ச.கிருபானந்தன் ‘சிகிச்சை வழியாக அரங்கினைக் கையாளுதல்’ எனும் விடயத்தில் கதையாடவுள்ளார்.
சிறப்பு அதிதியாக வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆறுதல் நிறுவன நிறைவேற்றும் பணிப்பாளர் சுந்தரம் டிவகலாலா கலந்து கொள்ளவுள்ளார்

ஏற்புரையினைப் புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்.

இதேவேளை, மேற்படி இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களைச் சூம் செயலி இலக்கம் 6473348261, கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செ. ரவிசாந்)